செல்போனில் தொடர்பு; பள்ளி மாணவி கடத்தல் - 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம்
தூப்ஹார் நகரில் இருந்த ரஞ்சித், போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார்.;
பல்லியா,
உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் தூப்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 10-ம் வகுப்பு மாணவிக்கு (வயது 16), செல்போன் மூலம் 22 வயது வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட அந்த மாணவியை, வழியில் வாலிபர் சந்தித்து பேசியுள்ளார். இதன்பின்னர் அவரை கடத்தி சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வராத மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், அடுத்த நாள் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில், மாணவியை தூப்ஹார் பகுதியிலேயே வைத்து, போலீசார் நேற்று மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
நடந்த சம்பவம் பற்றி போலீஸ் உயரதிகாரி அஜய் பால் நிருபர்களிடம் கூறும்போது, சீதாப்பூர் மாவட்டத்தின் சீதவுலி பகுதிக்கு உட்பட்ட சார்வா கிராமத்தில் வசித்து வரும் ரஞ்சித் பால் (வயது 22) என்பவருடன் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாணவியை கடத்தி சென்ற ரஞ்சித், 2 வாரங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். பள்ளி மாணவி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ரஞ்சித்துக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போக்சோ வழக்கும் பதிவாகி உள்ளது என்றார்.
இந்த நிலையில், தூப்ஹார் நகரில் இருந்த ரஞ்சித், போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார் என போலீஸ் சூப்பிரெண்டு ஓம் வீர் சிங் கூறியுள்ளார்.