கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரெயில்வே துறையை மாற்றி விட்டார் - அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரெயில்வே துறையை மாற்றி விட்டதாக அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
ஐதராபாத்,
செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய ரெயில்வேத்துறை உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள், ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரைவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியையும் கண்டு வருகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேத்துறையை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.