"தேசத்திற்கு வரலாற்று நாள்" - ஜனாதிபதி திரவுபதி முர்முவின் மணல் சிற்பத்தை அமைத்து அசத்திய சுதர்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.;

Update:2022-07-25 15:26 IST

Image Tweeted By Sudarsan Pattnaik

டெல்லி,

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஜனாதிபதியாக பதவி ஏற்ற கொண்ட திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.


சுதர்சன் பட்நாயக் பூரி நகரின் கடற்கரையில் திரவுபதி முர்முவின் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த சிற்பத்துடன் "தேசத்திற்கு ஒரு வரலாற்று நாள்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்