பஞ்சாப்: 38-வது ஆண்டு ராணுவ தாக்குதல் தினம் - அமிர்தசரஸ் பொற்கோயிலில் பலத்த பாதுகாப்பு!

பொற்கோயிலில் ‘ஆபரேசன் புளூ ஸ்டார்’ ராணுவ நடவடிக்கையின் 38-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.;

Update:2022-06-06 06:58 IST

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு பொற்கோவிலிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை அப்புறப்படுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து 'ஆபரேசன் புளூ ஸ்டார்' என்ற பெயரில் ராணுவம் பொற்கோவிலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையின் 38-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொற்கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் மற்றும் சிறப்புபடை பிரிவினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் அமிர்தசரஸ் நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்