கொரோனா ஊரடங்கு காலத்தில் பிணையில் விடப்பட்ட கைதிகள் மீண்டும் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரும் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-24 18:18 GMT

புதுடெல்லி,

சிறைச்சாலைகளில் கொரோனா பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், கொரோனா காலத்தில் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்ட அனைவரும் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் உயர் அதிகார குழுவால் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சரணடைய உத்தரவிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்