உலகின் மிக நீளமான நதிவழி உல்லாசக் கப்பலின் முதல் பயணம்

உலகின் மிக நீளமான நதிவழி உல்லாசக் கப்பலின் முதல் பயணம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.

Update: 2023-02-25 20:47 GMT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'எம்.வி. கங்கா விலாஸ்' என்கிற தனியார் உல்லாசக்கப்பல், நதி வழியாக இயக்கப்படும் கப்பல் ஆகும். இது தனது முதல் பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி வாரணாசியில் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இது புத்தகயா, விக்ரம் ஷிலா, சுந்தரவனக்காடுகள், காசிரங்கா தேசியப்பூங்கா, வங்காள தேசத்தின் டாக்கா வழியாக அசாமில் உள்ள திப்ரூகரில் பயணத்தை முடிக்கும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி முதல்பயணம், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) திப்ரூகரில் நிறைவடைகிறது. அங்கு மத்தியக்கப்பல் போக்குவரத்து மந்திரி சர்பானந்த சோனாவால் தலைமையில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

62 மீ. நீளமும், 12 மீ. அகலமும் கொண்ட இந்தக்கப்பலில் மொத்தம் 18 அறைகள் 5 நட்சத்திர ஓட்டலில் இருப்பது போல உள்ளன. சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த 32 பயணிகள் பயணிக்கிறார்கள். சுமார் 40 கப்பல் பணியாளர்களும் உள்ளனர்.

உல்லாசக்கப்பல் மேற்கொண்டுள்ள பயண தூரம் 3200 கி.மீ. ஆகும். இதனால் உலகின் மிக நீளமான நதிவழிக்கப்பல் என்ற பெயரை இந்தக்கப்பல் பெற்றுள்ளது. இதில் பயணம் செய்ய அடுத்த 2 ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்