உதய்பூரில் கன்னையா லால் படுகொலைக்கு பின் ஊரடங்கில் தளர்வு! இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கம்

உதய்பூர் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2022-07-02 05:57 GMT

உதய்பூர் ,

உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உதய்பூரின் சில பகுதிகளில் போராட்டங்கள், வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இன்று அஜ்மீரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

முன்னதாக, நேற்று அவர்களை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போது பொதுமக்கள் கடுமையாக கூடி முழக்கமிட்டனர். மேலும், உதய்பூர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில், உதய்பூர் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பியுள்ளது.

உதய்பூரில் நிலவும் பெரும் பதற்றத்திற்கு மத்தியில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று ஜெகன்நாதர் யாத்திரை அமைதியாக நடைபெற்றது.

இதனையடுத்து, ஊரடங்குச் சட்டம் இன்று நான்கு மணி நேரம் தளர்த்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் இணைய சேவைகள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்