3 மாதத்தில் கன்னடம் கற்று உத்தரகாண்ட் மாணவி சாதனை

3 மாதத்தில் கன்னடம் கற்று உத்தரகாண்ட் மாணவி சாதனை படைத்துள்ளார்

Update: 2022-05-22 22:07 GMT

பெங்களூரு: ஈடுபாடும், முயற்சியும் மட்டும் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்பதை மைசூருவில் ஒரு எஸ்.எஸ்.எல்.சி. மாணவி நிரூபித்து இருக்கிறார். அவரது பெயர் கல்பனா ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவரது தந்தை ஒரு வியாபாரி ஆவார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மைசூருவுக்கு வந்தார். பின்னர் அவர் தனது மகள் கல்பனா மற்றும் குடும்பத்தையும் மைசூருவுக்கு அழைத்து வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் கல்பனாவை அவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார்.


அங்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த அவருக்கு கன்னடம் தெரியாது. அவர் உத்தரகாண்டில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே படித்து வந்தாராம். இந்த நிலையில் 3 மாதத்தில் அவர் கன்னடம் கற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை வெற்றிகரமாக எழுதினார். அவர் 625-க்கு 514 மதிப்பெண்கள் பெற்றது மட்டுமல்லாமல், கன்னடத்தில் 92 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டுக்கும் சொந்தக்காரர் ஆனார். மாணவி கல்பனாவை மைசூரு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்