உத்தரகாண்ட் மின்மாற்றி வெடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

உத்தரகாண்ட் மின்மாற்றி வெடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.;

Update:2023-07-19 14:22 IST

சமோலி,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்டத் தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை இங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது மின்மாற்றி வெடித்துச் சிதறியது இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமோலி போலீஸ் சூப்பிரெண்டு பர்மேந்திர தோவல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் வி.முருகேசன் கூறியதாவது:-

ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஊர்க்காவல்படையினர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் மின்சாரம் பாய்ந்து உள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்