மதத்தலைவர்கள், ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் - துணை ஜனாதிபதி

மதத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-09-04 22:10 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று தாதிச்சி தேஹ்தன் சமிதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது:-

உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சினை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். மக்களின் சந்தேகத்தை போக்கி, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மதத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நல்ல அர்த்தமுள்ள செய்தியை பரப்புவதற்கு ஒவ்வொரு ஊடகவியலாளரும் பங்களிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்கும் தாதிச்சி தேஹ்தன் சமிதி அமைப்பின் முயற்சி பாராட்டத்தக்கது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்