மத்தியப் பிரதேசம்: மருத்துவமனை படுக்கையை ஆக்கிரமித்த தெருநாய்கள் - விசாரணைக்கு உத்தரவு

மருத்துவமனை படுக்கையில் தெருநாய்கள் படுத்திருந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-05 13:32 GMT

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இரண்டு தெருநாய்கள் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்ப்பிணி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்ற சித்தார்த் ஜெயின் என்ற உள்ளூர்வாசி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஜபல்பூரின் ஷாபுராவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜபல்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா கூறும்போது, "இது தொடர்பாக டாக்டர் சி கே அட்ராலியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்த விஷயம் தீவிரமானது. பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்