விநாயகர் சதுர்த்தியையொட்டி தார்வாரில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி தார்வாரில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் குருதத்த ஹெக்டே தலைமையில் நடந்தது.

Update: 2023-08-27 18:45 GMT

உப்பள்ளி-

விநாயகர் சதுர்த்தியையொட்டி தார்வாரில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் குருதத்த ெஹக்டே தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உப்பள்ளி- தார்வார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குருதத்த ெஹக்டே தலைமை தாங்கினார். இதில் போலீஸ் துறை, சமூகநலத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் குருதத்த ெஹக்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தார்வார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

சிலைகள் வைக்க...

அதேப்போல் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிலைகள் வைக்க 12 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தார்வார் மாவட்டத்தில் சிலைகள் வைக்க 10 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனை கண்காணிக்க அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தார்வார் மாவட்டத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது. அரசு அனுமதி வழங்கி உள்ள ஏரி, குளம், கால்வாய்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். ரசாயன மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகள் வைக்கவோ, கரைக்கவே அனுமதி இல்லை. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐகோர்ட்டு தடை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஒலி பெருக்கி பயன்படுத்த ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு கலெக்டர் குருதத்த ஹெக்டே கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்