இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-08 12:39 GMT

Image : PTI 

புதுடெல்லி,

இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்டு 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27, 2003 - டிசம்பர் 27, 2006க்கு இடையே பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் https://agnipathvayu.cdac.in இந்த இணையதளத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்