ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை; ரூ.1 கோடி அபராதம்

பெங்களூருவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 15:24 GMT

பெங்களூரு:

பெங்களூரு எலகங்காவில் உள்ள நகர ஆயுதப்படை போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீனிவாச ஐயர். இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் சீனிவாச ஐயர் வீட்டில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சீனிவாச ஐயர் வருமானத்திற்கு அதிகமாக 53 சதவீதம் சொத்து குவித்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில், போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஸ்ரீகாந்த் தீர்ப்பு வழங்கினார். இதில் சீனிவாச ஐயருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் சீனிவாச ஐயர் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்