மும்பையில் ரூ.19 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது

மும்பையில் ரூ.19 லட்சம் கள்ளநோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-24 18:45 GMT

மும்பை, 

மும்பையில் ரூ.19 லட்சம் கள்ளநோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.19 லட்சம் கள்ளநோட்டு

மும்பை மால்வாணி பகுதியில் ஒருவர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் மால்வாணி பகுதியை சேர்ந்த இர்பான் சேக் (வயது21) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்ட பொய்சரை சேர்ந்த மெகபூப் சேக்கை (23) கைது செய்தனர். போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.18 லட்சம் மதிப்பிலான 100, 200, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

2-வது சம்பவம்

மெகபூப் சேக் ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் \எடுத்து கள்ளநோட்டுகளை தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரூ.60 ஆயிரம் கள்ள நோட்டுகளுடன் மால்வாணி பகுதியில் ஆட்டோ டிரைவர் ஹனிப்சேக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ரூ.19 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்