நாளை மறுநாள் முதல் இரவு நேரத்தில் சிறப்பு பெஸ்ட் பஸ்கள் இயக்கம்- நவராத்திரியையொட்டி ஏற்பாடு

நவராத்திரியையொட்டி நாளை மறுநாள் முதல் இரவு நேரத்தில் சிறப்பு பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Update: 2022-09-23 18:45 GMT

மும்பை, 

நவராத்திரியையொட்டி நாளை மறுநாள் முதல் இரவு நேரத்தில் சிறப்பு பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு பஸ்கள்

கொரோனாவால் கடந்த 2 ஆண்டாக களை இழந்து காணப்பட்ட நவராத்திரி விழா நடப்பு ஆண்டில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழாவில் கர்பா நடனம், கோலாட்டம் உள்பட கலை நிகழ்ச்சிகள் நடத்த விழா ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிகளவில் மக்கள் வருகை தர இருப்பதால் அவர்களின் வசதிக்காக 26-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பெஸ்ட் குழுமம் சார்பில் இரவு நேரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

நள்ளிரவு வரையில் இயக்கம்

இது பற்றி பெஸ்ட் குழு அதிகாரி மனோஜ் வாரடே கூறியதாவது:-

நவராத்தியையொட்டி பெஸ்ட் குழுமம் சார்பில் மொட்டை மாடி பஸ்கள், ஏ.சி பஸ்கள் நள்ளிரவு வரையில் இயக்கப்பட உள்ளது. மொட்டை மாடி பஸ்கள் கேட்வே ஆப் இந்தியா முதல் தொடங்கி மகரிஷி கர்வே ரோடு, தார்டுதேவ், ஹாஜி அலி, ஒர்லி கடற்கரை, பாந்திரா எஸ்.வி ரோடு, லிங்க் ரோடு, ஜூகு தாராரோடு வழியாக ஜூகு கடற்கரை வரையில் இயக்கப்படும்.

இதேபோல ஏ.சி பஸ்கள் ஜூகு கடற்கரையில் இருந்து ஜூகு பஸ் நிறுத்தம், மித்திபாய் கல்லூரி, ஜோகேஸ்வரி லிங்க் ரோடு, மித்சவுக்கி, ஒர்லம் சர்ச், எஸ்.வி ரோடு, போரிவிலி ரெயில் நிலையம் வழியாக கோராய் டிப்போ வரையில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்