ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி: வெண்கலம் வென்ற இந்தியாவின் ஆதித்யா, சுஹானி
சீனாவில் நடந்த ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டியில் இந்தியாவின் ஆதித்யா மற்றும் சுஹானி வெண்கல பதக்கங்களை வென்றனர்.;
மும்பை,
சீனாவின் பன்ஜின் நகரில் ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த 26 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியை சேர்ந்த ஆதித்யா பட்டீல் என்ற மாணவர் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டார்.
7 வயது நிறைந்த ஆதித்யா 5ன் கீழ் 7 என்ற புள்ளி கணக்கில் 3வது இடம் பிடித்துள்ளார். அவர் சக இந்தியரான கியான் அகர்வாலை வீழ்த்தி வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.
அங்கு நடந்த 9 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான போட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுஹானி லோகியா வெண்கல பதக்கத்தினை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆதித்யா மற்றும் சுஹானி ஆகிய இருவரும் பாலாஜி குட்டுலாவிடம் பயிற்சி பெற்றவர்களாவர்.