தேசிய அளவிலான தடகள போட்டி சன் ஸ்டார் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை
தேசிய அளவிலான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சன் ஸ்டார் பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர்.;
பரமத்திவேலூர்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பில்டர்ஸ் கல்லூரியில், பள்ளி மற்றும் கல்லூரி கூட்டமைப்பின் சார்பாக தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் சன் ஸ்டார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பல மாணவ மாணவிகள் வெற்றிபெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் மணியன், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் சக மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.