பயணிகள் வாகனங்கள் விற்பனை 2.96% குறைந்தது

உள்நாட்டில், மார்ச் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 2.96% குறைந்தது வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல்

Update: 2019-04-09 03:50 GMT
புதுடெல்லி

உள்நாட்டில், மார்ச் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 2.96 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

சியாம் புள்ளிவிவரங்கள்

சியாம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

மார்ச் மாதத்தில் 2,91,806 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 3,00,722-ஆக இருந்தது. ஆக, விற்பனை 2.96 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதில் கார்கள் விற்பனை 6.87 சதவீதம் சரிவடைந்து 1,77,949 என்ற அளவில் உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலண்டு, மகிந்திரா மற்றும் வி.இ. கமர்ஷியல் வெஹிகிள்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 1,09,030-ஆக அதிகரித்துள்ளது.

இரு சக்கர வாகனங்கள் விற்பனை 17.31 சதவீதம் சரிவடைந்து 14,40,663-ஆக குறைந்து இருக்கிறது. இதில் மோட்டார்சைக்கிள் விற்பனை 14.27 சதவீதம் சரிந்து (11,45,879-ல் இருந்து) 9,82,385-ஆக குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 14.21 சதவீதம் சரிந்து 19,08,126-ஆக குறைந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19), பயணிகள் வாகனங்கள் விற்பனை 2.7 சதவீதம் அதிகரித்து 33,77,436-ஆக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது 32,88,581-ஆக இருந்தது. ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை 4.86 சதவீதம் வளர்ச்சி கண்டு (2,02,00,117-ல் இருந்து) 2,11,81,390-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 5.15 சதவீதம் அதிகரித்து (2,49,81,312-ல் இருந்து) 2,62,67,783-ஆக உயர்ந்து இருக்கிறது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 78,20,745 இரு சக்கர வாகனங் களை விற்பனை செய்துள் ளது. இதன்படி இந்நிறுவ னம் முதலிடத்தில் நீடிக்கி றது.

5.08 சதவீத வளர்ச்சி

கடந்த 2018-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த அளவில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 5.08 சதவீத வளர்ச்சி கண்டு 33,94,756-ஆக இருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் 32,30,614-ஆக இருந்தது.

மேலும் செய்திகள்