கார்மின் அப்ரோஸ் எஸ் 12 ஸ்மார்ட் கடிகாரம்

கார்மின் இந்தியா நிறுவனம் கார்மின் அப்ரோஸ் எஸ் 12 ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-05-05 13:36 GMT
விளையாட்டுகளிலேயே பணக்காரர்களின் விளையாட்டாகக் கருதப்படுவது கோல்ப் விளையாட்டாகும். இத்தகை யோருக்கு உதவும் வகையிலான ஸ்மார்ட் கடிகாரத்தை கார்மின் இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. அப்ரோச் எஸ் 12 என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கடிகாரத்தில் உலகில் உள்ள பிரபலமான 42 ஆயிரம் கோல்ப் மைதானங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. சூரிய வெளிச்சத்திலும் சிறப்பாக காட்சிகள் தெரியும் வகையில் இதன் திரை உள்ளது. கார்மின் கோல்ப் செயலி மூலம் விளையாட்டு வீரர் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கோல்ப் விளையாட்டின் வாராந்திர நிலவரம், போட்டி விவரங்கள், ஸ்கோர் விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் இதைப் பயன்படுத்துவோர் தாங்கள் சார்ந்த கோல்ப் கிளப் விவரத்தை பதிவு செய்துவிட்டால் அவரது செயல்பாடுகளை இது டிராக் செய்து துல்லியமாக வழங்கும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல்படும். ஜி.பி.எஸ். வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.20,990.

மேலும் செய்திகள்