மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு நாடகம்
மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.;
சுல்தான்பேட்டை
மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
தற்கொலைகள் அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் ஒருசில தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒருசில காரணங்களால் தற்கொலை முடிைவ எடுத்து விடுகிறார்கள். குறிப்பாக மாணவிகள் தான் இதுேபான்ற செயல்களில் அதிகஅளவில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாணவிகளுக்குத்தான் பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்ேவறு விழிப்புணர்வு மற்றும் எச்சாிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியம் சார்பில், கோவை அரசு பொருட்காட்சியில் எண்ணும், எழுத்தும் சுல்தான்பேட்டை யின் கண் எனத்தகும் என்ற தலைப்பில் மாணவிகள், பெண் குழந்தைகள் தற்கொலை செய்வதை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு நாடகம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களால் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு நாடகம்
செஞ்சேரிப்புத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் மகரஜோதிகணேசன், நாடகக் கதையை எழுதி இயக்கினார். இதில் தலைமை ஆசிரியர்கள் ரங்கசாமி (ஜல்லிபட்டி), மகேந்திரன் (புளியமரத்துபாளையம்), சதாசிவம் (கள்ளபாளையம்), முருகேசன் (இடையர் பாளையம்), ஜான் போஸ்கோ (பொன்னாக்கானி), லட்சுமணன் (மேட்டுலட்சுமிநாயக்கம்பாளையம்) மற்றும் ரஜினி பிரதாப் சிங் ஆசிரியர் ஆகியோர் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுல்தான்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் செய்து இருந்தார். விழிப்புணர்வு நாடகத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.