பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

BJP Demonstration

Update: 2022-11-15 16:42 GMT

வேலூர் சத்துவாச்சாரி மண்டலம் பா.ஜ.க. சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

மண்டல தலைவர்கள் கோபி, ரவி, மாநகராட்சி கவுன்சிலர் சுமதி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மனோகரன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வை கண்டித்தும், அவற்றை குறைக்க வலியுறுத்தியும், விலை உயர்வுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜெகன், எஸ்.எல்.பாபு, மண்டல தலைவர்கள் நாகராஜன், சுரேஷ், அரசு தொடர்புப்பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஊடகப்பிரிவு நிர்வாகி ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வேலூர் அண்ணா கலையரங்கம், தொரப்பாடி, ஓட்டேரி, காட்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்