எலச்சிபாளையம்:-
மல்லசமுத்திரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). விசைத்தறி தொழிலாளி. இவர், மல்லசமுத்திரம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் இளங்கோவன் என்பவரது தறிப்பட்டறையில் வேலை பார்க்க சென்றார். அங்குள்ள கழிப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இறந்த ரங்கசாமிக்கு, மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.