10 ரூபாய் நாணயம் செல்லுபடியாகும்

10 ரூபாய் நாணயம் செல்லுபடியாகும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்;

Update:2022-08-01 23:18 IST

வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகாது என்ற வதந்தியால் பொதுமக்கள் வாங்க மறுப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைகக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு 10 ரூபாய் நாணயங்களை அதிகளவில் வெளியிட்டுள்ளது.

இந்த நாணயங்கள் செல்லுபடியாகாது என்ற வதந்தியால் சில வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக தெரியவருகிறது. இந்த நாணயங்கள் செல்லுபடியாகாது என்பது வெறும் வதந்தி தான்.

இந்த 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும்.

அனைத்து வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.

எனவே பொதுமக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

--

Tags:    

மேலும் செய்திகள்