40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - மதுரை கோர்ட்டு தீர்ப்பு

40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update:2023-03-31 02:33 IST


மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டில் வாகனத்தில் கடத்தப்பட்ட 40 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கில் உசிலம்பட்டியை அடுத்த கீரிப்பட்டி சின்னச்சாமி (வயது 49), மானூத்து பகுதியை சேர்ந்த ராஜ்ஜியபிரபு என்ற கருவாயன் (36), வீரேந்திரன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில் இந்த 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்