1008 பால்குட திருவிழா

கரட்டு மேடு முருகன் கோவிலில் 1008 பால்குட திருவிழா நடைபெற்றது.;

Update:2023-01-23 00:15 IST


சரவணம்பட்டி

கோவையை அடுத்த சரவணம்பட்டி கரட்டு மேடு பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ரத்தினகிரி முருகன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தை மாத அமாவாசை அன்று 508 குடங்கள் பால், பன்னீர், தேன் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதேபோன்று இந்தாண்டும் தை அமாவாசையையொட்டி பால்குட விழா மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

முன்னதாக சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பு வேள்வி பூஜைகளுடன் பால்குட விழாவை தொடங்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பால், பன்னீர், தயிர், தேன், நெய் என 1008 குடங்களுடன் முருகனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் மலை அடிவாரத்தில் வேள்வி பூஜையில் 1008 குடங்களும் வைக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த உடன் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் மலை மேல் ஏறி மூலவரின் அபிஷேகத்திற்காக வேண்டுதலை செலுத்தினர்.

அங்கு 1008 குடங்கள் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

மேலும் செய்திகள்