108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

Update: 2022-11-21 19:50 GMT

பட்டுக்கோட்டையில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு பூமல்லியார்குளம் ஆதி கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.இதில் 108 சங்குகளும் கலசத்தை தாங்கி இருப்பது போல் அலங்காரம் செய்யப்பட்டது.முன்னதாக கைலாசநாதருக்கு பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து, பின்னர் சங்காபிஷேகம்செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் காசாங்குளம் விஸ்வநாதசாமி கோவில், கோட்டை சிவன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் உமாதேவி ஏற்பாட்டின் படி கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்