எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.;

Update:2025-12-05 21:32 IST

தூத்துக்குடி பி&டி காலனியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் சரவணன் (வயது 35), மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சண்முகபிரியா(30) என்ற மனைவியும், ரிசானா(8), சஹானா(5), ரிஷிலிங்கா(3) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணனுக்கு, நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதிக பணிச் சுமையின் காரணமாகவே சரவணன் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்