மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி பஞ்சாயத்து மகாதேவர்பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பெண்கள், 108 விளக்குகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கும், பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.