விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும்: நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
தகுதியான அனைவரின் வாக்கையும் உறுதி செய்து முழுமையான வாக்குப்பதிவுக்கு வழிவகுப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”வாக்காளர் பட்டியல் குறித்து பாஜகவின் நினைவூட்டல்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்குப் பிறகு தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் எனது அன்பான வேண்டுகோள்! பதினெட்டு வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான படிவத்தைப் பூர்த்தி செய்தும் பட்டியலில் பெயர் இல்லையெனில், அதற்கான காரணத்தை பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் விசாரிக்கவும். அதே நேரம், தகுதியான நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பட்சத்தில், அவர்களது பெயர்களை ஜனவரி 18 ஆம் தேதிக்குள் இணைக்க தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் உதவ வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தாமரைச் சொந்தங்கள் அனைவரும் களத்தில் முன்நின்று செயல்படுவோம்! தகுதியான அனைவரின் வாக்கையும் உறுதி செய்து முழுமையான வாக்குப்பதிவுக்கு வழிவகுப்போம்!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.