பணம் வைத்து சூதாடிய 11 பேர் சிக்கினர்

உளுந்தூர்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-29 00:17 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே சின்னகுப்பம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 37), பாலாஜி (36), கிருஷ்ணா (33), சுரேஷ் (33), அன்பழகன் (49), தணிகாசலம் (31) மற்றும் பரமசிவம் (46) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கொட்டையூர் ஏரிக்கரை மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடியதாக அதே ஊரை சேர்ந்த பூபாலன் (32), குமார் (39), இயேசு மணி (38),பாலா (29) ஆகியோரை எலவனாசூர்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்