சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 13,886 கனஅடி நீர் வெளியேற்றம்

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 13,886 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2022-10-20 17:05 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு மேற்புறமுள்ள அணைகளில் 11 கண் மதகு வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து 17,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையில் நீர்மட்டம் 117 அடிக்கும் மேல் வரும்.

உபரி நீரினை பாசன விதிமுறைகளின் படி வெளியேற்ற வேண்டியுள்ளதால் தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 13,886 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் நீர்வரத்து கணக்கில் கொண்டு நீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள பாதுகாப்பாக இருக்குமாறு சாத்தனூர் அணை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (நீர்வளத்துறை) கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்