நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

தச்சநல்லூர் பகுதியில் ஒரு நபர், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.;

Update:2025-12-17 21:23 IST

திருநெல்வேலி, தச்சநல்லூர், சங்கரன்கோவில் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பசாமி(எ) கருப்பன் மகன் சங்கர் (வயது 38) என்பவர், திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக அவர், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், தச்சநல்லூர் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்