திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3.82 கோடி - 1 கிலோ தங்கமும் கிடைத்தது

815 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.;

Update:2025-12-17 21:54 IST

தூத்துக்குடி,

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. நேற்று முன்தினம் கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ராமு முன்னிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

அப்போது உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 கிடைத்துள்ளது. அதேபோல் 1 கிலோ 139 கிராம் தங்கமும், 18 கிலோ 52 கிராம் வெள்ளியும், 815 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்