சின்னசேலத்துக்கு 1,457 டன் யூரியா வந்தது

சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,457 டன் யூரியா வந்தது

Update: 2023-02-08 18:45 GMT

சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாய பயன்பாட்டுக்காக வேளாண்மை துறை மூலம் சென்னையில் உள்ள உர தொழிற்சாலையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,457 மெட்ரிக் டன் யூரியா சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இதை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், துணை இயக்குனர்(கலெக்டரின் நேர்முக உதவியாளர்) விஜயராகவன், உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், 882 டன் யூரியாவை தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும், 252 டன் யூரியாவை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் என மொத்தம் 1,134 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகளை அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தலைவாசல், காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் 323 மெட்ரிக் டன் யூரியா அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்