சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு

ரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நீதிராஜன், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.;

Update:2025-12-06 07:57 IST

சென்னை,

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது 44). இவர் பால், தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாரதி (37). தையல்தொழிலாளி. இந்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் கடந்த 6-3-2020 அன்று தரமணியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நீதிராஜன், பாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதில் 2 பேரின் இறப்புக்கு தனித்தனியாக இழப்பீடு கோரி அவர்களது குடும்பத்தினர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், நீதிராஜன் இறப்புக்கு ரூ.21 லட்சத்து 64 ஆயிரமும், பாரதியின் மறைவுக்கு ரூ.25 லட்சத்து 72 ஆயிரத்து 800-ம் என மொத்தம் ரூ.47 லட்சத்து 36 ஆயிரத்து 800-ஐ இழப்பீடாக அவர்களது குடும்பத்தினருக்கு தனியார் காப்பீடு நிறுவனத்தினர் வழங்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்