ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி
மதுரையில் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது.;
மதுரை கே.கே.நகர் 3-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலவைரவன் (வயது 40), ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் கார்த்திகைராஜன், கீதா, சாந்தி, ராஜசேகரன் ஆகிய 4 பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் தாங்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய பாலவைரவன் ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு லாபத்தில் பங்கு தரவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.