181 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

மன்னார்குடி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 181 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை நகரசபை தலைவர் வழங்கினார்.;

Update:2023-08-19 00:15 IST

மன்னார்குடி:

மன்னார்குடி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். 29-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கலைவாணி கார்த்திக் முன்னிலை வகித்தார். முதுநிலை ஆங்கில ஆசிரியர் சண்முகராமன் வரவேற்றார். விழாவில் மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் கலந்து கொண்டு 181 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையின் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.அதனை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்றார். விழாவை ஆசிரியர் பாஸ்கரன் ஒருங்கிணைத்தார்.முடிவில் தமிழ் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்