மணல் கடத்தல்; 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-11 19:00 GMT

நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று காலை நாகூர் - நாகை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த சரக்கு வேனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் வைக்கோலை வைத்து மறைத்து மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. விசாரணையில் மணல் கடத்தி வந்தது தெத்தி கீழத்தெருவை சேர்ந்த சுரேந்திரபாபு மகன் ஈஸ்வரன் (வயது19), மோகன்ராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன், ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்