சென்னையில் சாலை விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவு
10 விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.
எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல், ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணியாதது, போக்குவரத்து இடையூராக வாகனம் நிறுத்துதல், நோ–பார்க்கிங், விதிமுறை பின்பற்றி நம்பர் பிளேட் பொருத்தாதது உள்ளிட்ட 10 விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.