முதியவருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

மன்னார்குடியில் ஓட்டலை சூறையாடி முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-06-21 19:30 GMT

மன்னார்குடியில் ஓட்டலை சூறையாடி முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓட்டல் சூறையாடல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி. தெருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் சம்பவத்தன்று இரவு 3 பேர் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். அப்போது மாமூல் தராததால் ஓட்டலை சூறையாடி அங்கு சாப்பிட வந்த முதியவர் ஒருவரை அரிவாளால் வெட்டினர்.

மேலும் ஓட்டல் உரிமையாளரின் தாயாரையும் தாக்கியதில் அவரும் காயம் அடைந்தார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் மன்னார்குடி அடுத்த சேரன்குளத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது30), மன்னார்குடி எடத்தெருவை சேர்ந்த பிரசாத் (35) ஆகிய 2 பேருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மன்னார்குடி வ.உ.சி. ரோடு பகுதியை சேர்ந்த விக்கி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்