வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது

சூலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-03-21 00:15 IST

சூலூர்

சூலூரை அடுத்த கலங்கல் தென்றல்நகரை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி ராதா (வயது42). சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் கதவை திறந்து வைத்த நிலையில் தூங்கினார். அப்போது அங்கு வந்த நர்ம நபர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அங்கிருந்த 2 பவன் தங்க நகையை திருடிக்கொண்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து ராதா சூலூர் போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதே பகுதியில் கட்டிட வேலை செய்யும் ஹானஸ்ட் ராஜ் (24) என்பவர் அந்த வீட்டிற்கு வந்து சென்று தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது ரத்னா வீட்டின் அருகில் உள்ள ரோஸி (48) என்பவரது திட்டப்படி 2 பவுன் சங்கிலியை திருடி ஆளுக்கு பாதியாக பிரித்து வைத்துக் கொண்டதாக தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்