ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-01-20 01:32 IST

சங்கரன்கோவில் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு லோடு ஆட்டோவில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அதை மடக்கி பிடித்து அரிசியையும், லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக செங்கோட்டை அருகே உள்ள பிரானூரை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 40), மேலபட்டமுடையார்புரத்தை சங்கரபாண்டியன் (32) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய மணிமுருகனை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்