நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரை தினமும் 2 மணி நேரம் மின் நிறுத்தம்
குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் நாளை முதல் வருகிற 14-ந்தேதி வரை தினமும் 2 மணி நேரம் மின்நிறுத்தம்;
குடியாத்தம்
குடியாத்தம் மின் கோட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, பாக்கம், செதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிகுப்பம், பரவக்கல், மொரசபல்லி, உப்பரபல்லி, சின்னவரிகம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி வரை தினமும் காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை குடியாத்தம், நெல்லூர்பேட்டை, பாக்கம், கீழ்ஆலத்தூர், மோடிகுப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, பரதராமி, கொத்தூர், பூசாரிவலசை, செதுக்கரை,
புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, சைனகுண்டா, சேங்குன்றம், ஆர்.கொல்லப்பல்லி, பரவக்கல், கார்க்கூர், மோர்தானா, மீனூர், குளிதிகை, செண்டத்தூர், பேரணாம்பட்டு, பாலூர் ஓம்குப்பம், கொத்தூர், குண்டலபல்லி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரபல்லி, பல்லாலகுப்பம்,
எர்த்தாங்கல், புதூர், நலங்காநல்லூர், மொரசபல்லி, டி.டி.மோட்டூர், கமலாபுரம், உப்பரபல்லி, சேம்பள்ளி, ஜிட்டப்பள்ளி, பெரும்பாடி, கொட்டாரமடுகு, மூங்கப்பட்டு, தட்டப்பாறை, தானாங்குட்டை, சின்னலபல்லி, சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராசாக்கல் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை குடியாத்தம் கோட்ட செயற் பொறியாளர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.