இந்தியா-ஓமன் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம்: ஆயத்த ஆடை துறை பெரிதும் பயன்பெறும்

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.;

Update:2025-12-19 14:04 IST

திருப்பூர்,

இந்தியா-ஓமன் நாட்டுக்கு இடையே பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதை இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) வரவேற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்புக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மையங்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் ஓமன், வளைகுடா, ஆப்பிரிக்க சந்தைகளுக்கு சுங்கவரி இல்லாத, உலகளாவிய போட்டித்திறன் கொண்ட வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.

வர்த்தக செலவுகளை கணிசமாக குறைப்பதன் மூலம், சந்தை அணுகலை விரிவுபடுத்தி உள்ளூர் உற்பத்தி அமைப்புகள் உலக மதிப்பு சங்கிலிகளுடன் தடையின்றி இணைய உதவும். ஓமன் மற்றும் வளைகுடா-ஆப்பிரிக்க சந்தைகளுக்கு சுங்கவரி இல்லாமல் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியும்.

இதுபோல் துணிநூல், வேளாண்மை போன்ற துறைகள் பெரிதும் பயனடையும். இந்த ஒப்பந்தம் அமைய முயற்சி மேற்கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலுக்கு ஏ.இ.பி.சி. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்