சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் - தீர்மானம் நிறைவேற்றம்
200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன.;
சென்னை,
தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக சென்னையில் 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி ரூ.25.95 கோடி செலவில் தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கான தனி ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.