அரசு பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிதாக 2 வகுப்பறைகள்

அரசு பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிதாக 2 வகுப்பறைகளை ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.;

Update:2023-09-29 00:23 IST

திமிரி

அரசு பள்ளியில் ரூ.30 லட்சத்தில் புதிதாக 2 வகுப்பறைகளை ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

கலவையை அடுத்த மேல்நெல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சத்து 30 ஆயிரம மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது.

இதனை ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில் திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், ,துணை தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நட்டு வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்..

நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் அமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் குமாரி கலைமணி, பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்