அரக்கோணத்தில் ரூ.93 லட்சத்தில் 2 பூங்காக்கள்

அரக்கோணத்தில் ரூ.93 லட்சத்தில் 2 பூங்காக்களை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.;

Update:2023-06-09 23:55 IST

அரக்கோணம் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21-வார்டு பாக்கியம்மாள் காலனியில் ரூ.33 லட்சம் மதிப்பிலும், 9-வது வார்டு லட்சுமி நகரில் ரூ.60 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறப்பு விழா நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மாவட்ட கலெக்டர் வளர்மதி, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, நகரமன்றத் தலைவர் லட்சுமி பாரி, தாசில்தார் சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையர் லதா, நகரமன்ற துணைத் தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ், நகராட்சி என்ஜினீயர் ஆசிர்வாதம், நகரமன்ற உறுப்பினர்கள் மாலின், வடிவேல், துரை சீனிவாசன், நகர தி.மு.க. செயலாளர் வி.எல்.ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்