காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையை பெரிது படுத்த வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
எங்கள் கட்சி பிரச்சினையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
எங்கள் கட்சியில் என்ன பிரச்சினையோ அதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜகவுக்கு ஆதரவாகவோ யாராவது பேசினால் அந்த புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் எங்கள் கூட்டணி கட்சிகளும் இதனை பெரிது படுத்து வேண்டாம். உள்கட்சி விவகாரத்தில் தயவு செய்து எந்தவித பிரச்சினையும் ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். ஏற்கனவே நடவடிக்கைக்கு நாங்கள் பரிந்துறை செய்துவிட்டோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த விதத்திலும் தலைகுனிவை ஏற்படுத்துவதையோ, தமிழ்நாடு அரசு மீது தேவை இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதையோ கூட்டணி கட்சியான காங்கிரஸ் இயக்கம் அது யாராக இருந்தாலும் அனுமதிக்காது. கூட்டணி கட்சிகளுக்கு நட்புடன் சொல்கிறேன் இதனை பெரிது படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.