அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும்: டிடிவி தினகரன் வாழ்த்து

அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-31 12:17 IST

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக மக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வளமான வாழ்வை வாழ்ந்திடவும், சமூகப் பொருளாதார நிலையில் அவரவர் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.

புதிய தொடக்கத்தோடு புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தாண்டு, நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியையும், குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் எனக்கூறி, மீண்டும் ஒருமுறை எனது ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்